Thursday, October 14, 2004

பல்லவியும் சரணமும் - III

இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில்!!!

1. முதிராத காதல் கனியும் இன்னும் முற்றாத கன்னி நகையும், அத்தான் என்றழைக்கும் அழகும்
2. கலைமாது தான் மீட்டும் இதமான வீணை, கனிவான ஸ்வரம் பாட பதமானது!
3. தெய்வம் என்றால் அது தெய்வம், சிலை என்றால் அது சிலை தான்!
4. காதல் ஒரு கீதம், அதைக் கண்டேன் ஓரிடம், போனாள் அவள் போனாள் நான் பார்த்தேன் நூறிடம்!
5. தேனோடு பால் தரும் செவ்விளநீர்களை ஓரிரு வாழைகள் தாங்கும்!
6. குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித் திரிந்தோமே!
7. அது அல்லவோ பருகாத தேன், அதை இன்னும் நீ பருகாததேன்?
8. இளங்காற்று தீண்டாத மலரில்லையே, கிளி வந்து கொத்தாத கனியில்லையே!
9. தேக சுகத்தில் கவனம், காற்று வெளியில் பயணம், கங்கை நதிக்கு ...
10. பொன்மலர் கண்களில் அஞ்சனம் தீட்டி, பூவையின் அண்ணன் கைவளை பூட்டி! தாய் வழியே வந்த ...


என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்!
மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

4 மறுமொழிகள்:

யோசிப்பவர் said...

2. ராகங்கள் பதினாறு, உருவான வரலாறு
3. உள்ளம் என்பது ஆமை, அதில் உண்மை என்பது ஊமை
6.
9. இளமை எனும் பூங்காற்று

aruppukottaiyan said...

1. don't know.
2. rAgangal pathinAru uruvAna varalAru .
3. ullam enpathu Amai. athil unmai enpathu oomai
4. Sorkkam mathuvilae. sokkum azhagilae.
5. inpamae unthan paer penmaiyo. en ithayakkani.
6. pasumai niraintha ninaivugalae.
7. ninaivo oru paravai. virikkum athan sirakai.
8. chandrothayam oru pennAnatho.senthamarai iru kannAnatho.
9. ilamai enum poongAtru paduvathu oar pAttu.
10. poomudippal intha poonguzhali puthu seer peruval vanna thenaruvi.

யோசிப்பவர் said...

இங்க நிக்குது, வர மாட்டெங்குது!

கண்டுபிடிசிட்டேன்!கண்டுபிடிசிட்டேன்!
6.பசுமை நிறைந்த நினைவுகளே

அன்பு said...

அத்தான் என்றழைக்கும் அழகும்-ல இருந்து ஹம் பண்ணா...
1) மஞ்சள் முகமே வருக... (படம் தெரியாது?)
சரியா... இந்த ஒருபல்லவியைவாவது நான் கண்டுபிடித்ததாய் இருக்கட்டுமே:)

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails